முக்கிய செய்திகள்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : இன்று முதல் தொடங்கியது..


10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று(ஏப்.,21) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த வாரம் நிறைவடைந்தன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தன. மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைந்துள்ளன.

 

இதனையடுத்து, இன்று முதல், மே, 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மீண்டும், ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.