பூமியை பாதுகாக்கும் வகையில் இன்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சுழல் மாசுபாடு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இது மனித வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
உலகிற்கே உணவளித்து, உயிர் காக்கும் ஆதி தொழிலான விவசாயமும், அது சார்ந்த கால்நடை வளர்ப்பு தொழிலும் அழிந்து வருகின்றன. இதனைத் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.