நாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..


பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பா நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ. எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் இன்று ஆளுநர்  வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாஜக வை சேர்ந்த எம்.எல்.ஏ.சுரேஷ்குமார் டுவிட்டடரில் பதிவிட்டிருப்பதாவது: பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் கவர்னர் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் , இதனையடுத்து நாளை காலை9.30 மணி அளவில் முதல்வராக எடியூரப்பாஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பதவியேற்க உள்ளதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

11 நாள் அவகாசம்

இதற்கிடையே எடியூரப்பாவிற்கு 11 நாட்கள் அவகாசம்அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனநாயகம் குழி தோண்டி புதைப்பு

கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு

எடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..

Recent Posts