நடப்பு கணக்கு பற்றாக்குறை கிர்ர்…: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எகிறியது

 

நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்து, ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளது.

மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், கடந்த ஜுலை மாதம் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்து 2577 கோடி டாலராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இறக்குமதி 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்ததைக் காட்டிலும் 28 சதவீதம் உயர்ந்து 4379 கோடி டாலராக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1802 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜுலை மாதத்தில் தங்கம் இறக்குமதி 41 சதவீதம் உயர்ந்து 296 கோடி டாலராக அதிகரித்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 30 சதவீதமும், முத்துக்கள், ஆபரணங்களின் ஏற்றுமதி 24 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

 ​Trade deficit widens to 5-yr high in July; exports grow by 14.3%

 

ஓணம் விழாக்கள் ரத்து: கேரள அரசு அறிவிப்பு

சமூகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை: 72-வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் மக்களுக்கு அறிவுரை..

Recent Posts