ரயில் பயணிகளிடம் ஊழியா்களே குப்பைகளை பெறும் வசதி விரைவில் அறிமுகம்


ரயில் பயணிகளிடம் இருந்து உணவுக்கு பின்னா் ரயில்வே ஊழியா்களே நேரில் வந்து குப்பைகளை பெற்றுச் செல்லும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே வாரிய தலைவா் அஷ்வானி லோஹானி தொிவித்துள்ளாா்.

தலைநகா் டெல்லியில் ரயில்வே துறையின் அனைத்து கோட்ட உயா்மட்ட அதிகாாிகள், ரயில்வே வாாிய உறுப்பினா்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ரயில்வே வாாிய தலைவா் அஷ்வானி லோஹானி கூட்டத்தைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசுகையில், விமானத்தை போல இனி ரயில் பெட்டிகளிலும், சாப்பாட்டுக்கு பிறகு குப்பைப் பொருட்களை சேகரிக்க ஊழியா்கள் பைகளை கொண்டு வருவாா்கள்.

ஒவ்வொரு பயணிகளிடத்திலும் வந்து கேட்டு குப்பையை பெற்றுச் செல்வாா்கள். பயணிகள் சாப்பிட்ட பின் வைத்திருக்கும் ட்ரே, தட்டுகள் அல்லது எந்தவொரு உதிரி குப்பைகள் என்றாலும் அவற்றை சேகரித்துச் செல்வாா்கள்.

ஒருவேளை சில ரயில்களில் கேண்டீன் ஊழியா்கள் இருக்க வாய்ப்பில்லை என்றால் அத்தகைய ரயில்களில் துப்புரவு பணியாளா்கள் பைகளை பயணிகளிடம் எடுத்துச் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும். குப்பை சேகரிப்பு பைகள் இப்போது வழக்கமான கேண்டீன் ஒப்பந்தங்களோடு இணைத்துக் கொள்ளப்படும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

நில ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் பஞ்சாப் முதல்வர் விடுவிப்பு..

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு..

Recent Posts