முக்கிய செய்திகள்

ரயிலில் பாலியல் தொல்லை இளைஞர் கைது..

சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ர ரயிலில் தனியாக பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த சத்யராஜ் (25) என்ற இளைஞர் கைது

சென்னை மின்சார ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், மத்திய அரசு சில தினங்களுக்கு முன், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்தை நிறைவேற்றியது.

இந்நிலையில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் வேளச்சேரி-கடற்கரை மின்சார ரயிலில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சத்யராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, அதே ரயிலில் பயணித்த ரயில்வே காவல்துறை அதிகாரி, உடனே சத்யராஜை கைது செய்து, அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதில், அந்தப் பெண் மயக்கமடைந்ததால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.