முக்கிய செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர் பிரச்னையில் மத்தியஸ்தராக ஓய்வுப்பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்


போக்குவரத்து தொழிலாளர்கள்-தமிழக அரசு இடையே பேச்ச வார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற விசாரணையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தரை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும், அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற முடியாது என்றும் கூறியுள்ளது.

 மேலும் வேலைநிறுத்த நாட்களில் ஊதியம் இல்லை என்றும் போக்குவரத்து செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் மூலம் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனை பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முடிவு எடுக்கப்படும்.