முக்கிய செய்திகள்

`பயணத்தை அரசியலாக்குகின்றனர்!’ : தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்….


திருச்சிக்கு ரயிலில் மேற்கொள்ளும் பயணத்தை சிலர் அரசியலாக்கிவிட்டதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு, திருச்சியில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு கமல்ஹாசன், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 3-ம் தேதி பயணிக்கிறார். இந்தப் பயணத்தின்போது, இடையில் உள்ள ரயில் நிலையங்களில் அவர் தொண்டர்களைச் சந்திக்க இருக்கும் அறிவிப்பால், பொதுமக்கள் அவதிப்படுவர். எனவே, ரயிலை பிரசார மேடையாக கமல் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரி, தென்னிந்திய ரயில்வேயின் பொதுமேலாளரிடம் சிலர் மனு அளித்தனர். இந்த விவகாரம் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் விளக்கமளித்துள்ளார்.