முக்கிய செய்திகள்

நீர்லயும் நிலத்துலயும் வாழ்ற உயிரினம் எது….?

 

கோல் போஸ்ட் என்று ஒன்று உண்டு. அதனுள் அடித்தால்தான் கோல்.

கமல் எல்லா திசைகளிலும் உதைக்கிறார்.
இது ஃபெனால்டி கேம்

கமல் குழப்பத்தில் இருக்கிறார் என தோன்றுகிறது.

– மூத்த பத்திரிகையாளர் டி.வி.எஸ் சோமு, முகநூலில்

000

நீர்லயும் நிலத்துலயும் வாழ்ற உயிரினம் எது….?
ஆமை, பாம்பு, தவளை, சென்னை மக்கள், டி.வி. ரிப்போர்ட்டர்கள்.

– திருமேனி சரவணன், ஊடகவியலாளர், முகநூலில்

000

எழுத்தாளர்?

புதிய தலைமுறை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் இன்று புதிதாக எழுத்தாளர் என ஒருவர் வந்தார்.

பாஜக நாராயணன் தன் சுற்று முடிந்ததும் தான் கொண்டுவந்த குறிப்புகளை அவரிடம் கொடுத்ததை நேரடியாகவே பார்க்க முடிந்தது.

பச்சையாக பாஜக ஆதரவாளர்களாக செயல்படும் இவர்களை தொடர்ந்து ஊடகங்கள் சமூக ஆர்வலர், எழுத்தாளர், சாமானியர் என்று அறிமுகப் படுத்துவது ஏன்?

– தளபதி ராஜ், முகநூலில்

000

Trends on social media

________________________________________________________________________