முக்கிய செய்திகள்

திரும்பிப் பார்க்கவைத்த திருச்சி சிவா..

‘கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா’ – இது டெல்லியில் உள்ள மதிப்புமிகு கிளப். நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட இந்த கிளப்பில் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்தினர்களாகவும் பொறுப்பாளர்களாகவும் இருப்பார்கள்.

மக்களவை சபாநாயகர் தலைமையில் இயங்கும் இதன் நிர்வாகக் குழுவுக்குக் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடந்தது.

இதற்காக பல குழுக்கள் அணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த திமுகவின் திருச்சி சிவா தனி ஆளாகப் போட்டியிட்டார்.

வெற்றிபெற்ற அணிக்கு 114 வாக்குகள்.

சிவா வெற்றிபெற முடியவில்லை என்றாலும் தனித்து நின்று 100 வாக்குகளைப் பெற்றார்.

மத்திய அமைச்சர்கள் சிலரும் சிவாவுக்கு ஆதரவளித்தது அணி அமைத்து களத்தில் நின்றவர்களை மிரள வைத்திருக்கிறது!

நன்றி
தி தமிழ் இந்து