முக்கிய செய்திகள்

செக்ஸ் பூச்சி ட்ரம்ப் ஓர் அதிபரா? – பிபிசி டாகுமென்டரியில் சீறும் அழகிகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்பது பழைய செய்தி. ஆனால், ரியல்  எஸ்டேட்டில் கொடிகட்டி பறந்த ட்ரம்ப், 80, 90 களில் 14 ,  17 வயது சிறுமிகளையெல்லாம் செக்ஸ் டார்ச்சார் செய்து அனுபவித்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்களை பிபிசி தொலைக்காட்சி டாகுமென்டரியாகவே வெளியிட்டுள்ளது. அதுவும் ட்ரம்ப் இங்கிலாந்துக்கு சென்ற தருணத்தில் அதனை பிபிசி தொலைக்காட்சி பிபிசி பனோரமா (BBC Panorama) என்ற பெயரில் ஒளிபரப்பி உள்ளது. ஜூலை 9ம் தேதி “ட்ரம்ப் என்ற செக்ஸ் பூச்சி அதிபரா?” ( “Trump: Is the president a sex pest?”) என்ற தலைப்பில் பிபிசியில் ஒளிபரப்பான அந்த டாகுமென்டரியில், ட்ரம்பினால் சிறுவயதில் சீரழிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தங்களது அவலக் கதைகளை கூறியுள்ளனர்.  அவர்களில் ஒருவர் பார்பரா பில்லிங் (Barbara Pilling). 80 களில் ட்ரம்பிடம் தான் அனுபவித்ததைப் பற்றி அவர் கூறுகிறார்…

எனக்கு அப்போது 17 வயது. இளம் மாடலான என்னை அவர் படுக்கைக்கு அழைத்த போது வயதைக் கூறினேன். அதற்கு நல்லதா போச்சு… நீ அதிக வயதானவளும் இல்லை… மிகச் சிறிய வயதுமில்லை என்றார் ட்ரம்ப் என ட்ரம்பின் கேரக்டரைப் புட்டு வைத்திருக்கிறார். மற்றொரு பெண் ஹீதர் ப்ரேடன் (Heather Braden). இந்தப் பெண் சொல்லும் கதை இன்னும் கொடுமையானது. ட்ரம்ப் உட்பட 4 ஆண்கள், 50 இளம் அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்துள்ளனர். அந்த 50 பெண்களில் ஒருவர்தான் ஹீதர் ப்ரேடன். “ஒரு மாமிச சந்தைக்குள் ஒரு துண்டாக கிடப்பதைப் போல் அப்போது உணர்ந்தேன் என்கிறார் ஹீதர் ப்ரேடன். இந்த டாகுமென்டரியை ஒளிபரப்பிய பிபிசி, இறுதியில் இதற்கெல்லாம் நேரடியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறது.