வடகொரிய அதிபர் கிம் ஜோங் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி டிரம்ப் -கிம் ஜோங் உன் இடையே சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜோங் உன் னுக்கு இன்று எழுதிய கடித்ததில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக அமெரிக்க துணை அதிபரின் சர்ச்சை பேச்சு குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் பேச்சுவார்த்தை ரத்து ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.