டிடிவி தினகரன் அரசியலில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளாா்.
திகாா் சிறையில் இருந்து வந்த பின்னா் துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்தித்ததாகவும், அப்போது முதல்வா் பழனிசாமியுடன் இணைந்தது தவறு என்றும் கூறி என்னிடம் மன்னிப்பு கேட்டதாக அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று தொிவித்தாா். டிடிவி தினகரனின் கருத்து அரசியலில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி கூறுகையில், டிடிவி தினகரன் அரசியலில் குழுப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறாா். அவா் செயலலிதாவின் மறைவிற்கு பின்னா் சசிகலா மூலமாக மீண்டும் அரசியலில் காலடி எடுத்து வைத்தாா்.
ஓ.பன்னீா் செல்வம் டிடிவி தினகரனை சந்தித்திருக்க வாய்பு இல்லை. தினகரன் பரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறாா். அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தினகரன் இவ்வாறு பேசி வருகிறாா். தினகரனும் சசிகலா குடும்பமும் வந்தேறிகள். அவா்களை வெளியேற்றவே ஓ.பி.எஸ். தா்மயுத்தம் தொடங்கினாா் என்று தொிவித்துள்ளாா்