முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவின் அறைக்குள் செல்கிறார்கள்… செல்லட்டும்: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் சோதனையிடுவது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று அதிகாரிகள் சோதனையிடுகின்றனர். அது எங்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் கருவறையைப் போன்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கூட சசிகலா அதற்குள் செல்ல யாரையும் அனுமதித்ததில்லை. அங்கு என்ன இருக்கப் போகிறது. அங்கு அதிகாரிகள் செல்கிறார்கள். வரும் முன்னரே யோசித்திருக்க வேண்டும். வந்துவிட்டார்கள். செல்லட்டும். மூச்சுக்கு முந்நூறு தடவை அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என முழங்கும் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும். என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

TTV Dhinakaran About ride in Boes Garden