முக்கிய செய்திகள்

வேறு யார்…? பாஜகதான் காரணம்: தினகரன் திட்டவட்டம்

 

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னணியில், பாஜகவின் பங்கு இருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தினகரன் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் தாமே போட்டியிடப் போவதாக தெரிவித்தார். இரட்டை இலையை மீட்பது தொடர்பாக வரும் 27ந்தேதி உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார். இரட்டை இலைச் சின்னம் ஈபிஎஸ் – ஓபிஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் ஆளும் கட்சியான பாஜகவின் பங்கு இருக்கும் என்பதுதானே இயல்பானது என்று பேட்டியின் போதும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.

 

TTV Dinakaran Charge BJP in ADMK symbol issue