முக்கிய செய்திகள்

டிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின் வீடு அமைந்துள்ளது. இன்று மதியம் அவர் வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதில், ஒரு கார் ஓட்டுனர் பாண்டித்துரை, புகைப்பட கலைஞர் டார்வின் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் என 3 பேர் காயமடைந்துள்ளனர்.

டிடிவி தினரகன் வீட்டிற்கு வந்திருந்த காஞ்சிபுரம் கட்சி பிரமுகர் உமா மகேஸவரியின் கார் இந்த சம்பவத்தில் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதற்கு சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காஞ்சியை சேர்ந்த பிரமுகர் தான் காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

உமா மகேஸ்வரி, தினகரனின் வீட்டில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் உயிர் தப்பினார்.