மேல்முறையீடு வேண்டாம் என 18 எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்: டிடிவி தினகரன் பேட்டி

தகுதிநீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என 18 எம்எல்ஏக்களும் தெரிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை மக்கள் விரும்பவில்லை என பாதிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தெரிவிக்கின்றனர்.  தேர்தலை சந்திப்பதையே மக்கள் விரும்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஒரு சில எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்திய பின் தேர்தலை சந்திப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது என்பதே பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. மேலும், தமிழக மக்களின் எண்ணமே எங்களுக்கு முக்கியம் என்பதால் அதன் அடிப்படையிலேயே முடிவு எடுப்போம். அக்.31ம் தேதி இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு மதுரையில் இருந்தே வெளியாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran interview about 18 MLAs Issue

 

 

ஹாட்ரிக் சதம் அடித்து ‘கிங் விராட் கோலி’ இன்னொரு சாதனை…

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 68-ஆக உயர்வு..

Recent Posts