முக்கிய செய்திகள்

நான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல: டிடிவி தினகரன்!

தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதனால் தான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:

இது நான் எதிர்பார்த்த வெற்றிதான். 60 சதவீதத்திற்கும் மேல் எதிர்பார்த்தேன. ஆனால் , 50 சதவீதம் தான் வாங்கி உள்ளேன். தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால் நான் எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ அல்ல. சாதாரண தொண்டன் நான். என்னை ஆதரிப்பவர்கள் தோளில் சுமந்து தூக்கி வருகிறார்கள். அதிமுக ஜனநாயக கட்சி. எதுவாக இருந்தாலும், கட்சியில் உள்ள எனைவிட   மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தே காரியமாற்றுவேன்.  முதலமைச்சர் அணியினர் மீண்டும் இணைந்து செயல்பட முன்வந்தால், அது குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

முன்னதாக, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதா இருந்த இடத்தில் யார் இருக்க வேண்டுமென மக்கள் முடிவெடுத்துள்ளதாகவும், ஏழரை கோடி மக்களின் எண்ணங்களை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பிரதிபலித்துள்ளதாகவும் கூறினார்.

 

TTV Dinakaran Interview