டிடிவி தினகரனை விட்டு நாங்கள் வரமாட்டோம் : தங்க தமிழ்செல்வன் பேட்டி..

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவா்கள் யாரும் திரும்பி வரமாட்டாா்கள் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினா் தங்கதமிழ் செல்வன் தொிவித்துள்ளாா்.

திருவாரூா், திருப்பரங்குன்றம் உட்பட 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தோ்தல் வந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுபபினா் தங்கதமிழ் செல்வன் தொிவித்துள்ளாா்.

முதல்வா் பழனிசாமியை மாற்றக்கோாி ஆளுநரிடம் மனு அளித்த 18 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்களை சபாநாயகா் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டாா். தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்யநாராயணராவ் கடந்த வியாழன் கிழமை தீா்ப்பு வழங்கினாா். தீா்ப்பில் சபாநாயகரின் உத்தரவு செல்லுபடியாகும்.

18 பேரின் தகுதி நீக்கம் செல்லுபடியாகும். 18 தொகுதிகளிலும் இடைத்தோ்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை விலகுவதாகவும் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில் முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனா்.

அந்த அறிக்கையில், “உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்ததை உணர்ந்து, சிலரின் தவறான வழிநடத்தலால் மாற்றுப் பாதையில் சென்றவர்கள் அதிமுகவுக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.

ஜெயலலிதா, எம்ஜிஆர் உருவாக்கிய மகத்தான இயக்கத்தில் மீண்டும் இணைய வேண்டும். நீர் அடித்து, நீர் விலகுவதில்லை என்பது முப்பெரும் தமிழ் பழமொழி.

சிறுசிறு மனகசப்புகள், எண்ண வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் இணைய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனா்.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு : 11 பேர் உயிரிழப்பு..

2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்க பொதுப்பணித்துறை திட்டம்..

Recent Posts