முக்கிய செய்திகள்

இரட்டை இலை: உச்சநீதிமன்றத்தில் இன்றோ நாளையோ மேல்முறையீடு செய்கிறார் தினகரன்

அதிமுக கட்சியும், அதன் சின்னமான இரட்டை இலையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கே (மதுசூதனன் அவைத்தலைவராக இருந்த அதிமுகவுக்கு) உரியது என கடந்த 24 ஆம் தேதி மத்திய தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. மறுநாளே, ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவர் தரப்பிலும்,  இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் தரப்பு வழக்குத் தொடர்ந்தால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தீர்ப்பளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தனித்தனியாக கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரட்டை இலைச் சின்னம் கிடைத்த உடனேயே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரட்டை இலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இன்றோ அல்லது நாளையோ மேல் முறையீடு செய்யத் தினகரன் தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

TTV Dinakaran Plan to appeal in symbol case at SC today or tomorrow