2020ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக துளசி கபார்ட் பேட்டி அளித்துள்ளார்.
துளசி கபார்ட் :
37 வயதான ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசி கபார்ட், அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி என்ற பெயரைப் பெற்றவர்.
ஆனால் இவர் இந்தியர் இல்லை.இவர் சமோக தீவுகளை சேர்ந்த கத்தோலிக்க மதத்தை போதிக்கும் தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவர்.
இந்து மதத்தின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக இவர் இந்து மதத்திற்கு மதம் மாறியவர்.
துளசி கபார்ட் அரசியல் பயணம் :
அவரது, 21-வது வயதில் செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நடுவில் பதவியை விடுத்து ஈராக்கில் போர் நடக்கும் பகுதியில் பணி புரிந்தார்.
2012-ம் ஆண்டு மீண்டும் ஜனநாயக கட்சியால் திரும்ப அழைக்கப்பட்டார். அமெரிக்கா அரசியலில் மிகவும் பிரபலமானவர் துளசி கபார்ட்.
அரசியல் அறிவிப்பு :
“2020-ல் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவேன்” என்று கூறி வந்த துளசி ,தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
நீதித்துறை சீர்திருத்தம், பருவ நிலை மாற்றம் மற்றும் ஹெல்த் கேர் ஆகியவற்றை தனது முக்கிய பட்டியலில் வைத்திருப்பதாகவும் தனது விருப்பத்தை தெரிவிக்கும்பொழுது இதை பற்றி விளக்குவதாகவும் கூறியுள்ளார்.
“அன்பைவிட வேறு எந்த சக்தியும் பெரிதல்ல. அன்பால் கட்டமைக்கப்பட்ட அமெரிக்காவை உருவாக்க வேண்டும்” என்றும் கூறினார்.
துளசி கபார்ட் 2020ஆம் ஆண்டிற்கான அமெரிக்க தேர்தலில் போட்டியிடுவாராயின் வெள்ளை மாளிகை அறிவிக்கும் தேர்தல் போட்டியில் பிரதான கட்சி சார்பாக போட்டியிடும்
முதல் இளம் இந்து பெண் என்ற பெருமையும், ஜனாதிபதி தேர்தலில் துளசி கபார்ட் வெற்றி பெற்றால் அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிபர் பதவி வகித்த முதல் இளம் பெண் என்ற பெருமையையும்
பெறுவார்