முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அரசுப் பேருந்து மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக கள்ளவாண்டன், சிவராமன், பேச்சிமுத்து ஆகிய மூன்று பேரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிசிடிவி வீடியோ பதிவு அடிப்படையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வருகின்றனர் காவல்துறையினர்.