முக்கிய செய்திகள்

சென்னை – தூத்துக்குடி இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது இண்டிகோ ..

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது.

சென்னையில் இருந்து முதல் விமானம் தூத்துக்குடி வந்தடைந்தது. காலை 5.50 மணிக்கு புறப்பட்ட விமானம் 7.15-க்கு தூத்துக்குடி வந்து சேர்ந்தது.

விமானசேவை விவரம்

சென்னை – தூத்துக்குடி இடையே தினசரி 3 முறை இண்டிகோ நிறுவனம் இயக்குகிறது. சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் விமானம் தூத்துக்குடிக்கு 7.30-க்கு வந்து சேரும். இதே போல் காலை 10.25-க்கு புறப்படும் விமானம் மதியம் 12.05-க்கு தூத்துக்குடி சென்றடையும்.

பிற்பகல் 2.40-க்கு 3-வது விமானம் புறப்பட்டு மாலை 4.20-க்கு தூத்துக்குடி வரும். தூத்துக்குடியில் காலை 7.55-க்கு புறப்படும் விமானம் 9.30 மணிக்கு சென்னை வந்து சேரும். பிற்பகல் 12.35-க்கு 2-வது விமானம் புறப்பட்டு 2.15-க்கு சென்னை வந்து சேரும். மாலை 4.40-க்கு புறப்படும் 3-வது விமானம் 6.15-க்கு சென்னை வந்தடையும்.