தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி,அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷணன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது எதிர்பாரத ஒன்று, இதை பார்க்க தலைவர் கலைஞர் இல்லையே என வருத்தமாக உள்ளது இருந்தாலும் அவருடைய சிலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி என்றார்.
“தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நம்மை வெற்றி பெற செய்திருக்கிறார்கள்”