தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்..


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மக்களின் மாபெரும் புரட்சிக்கு பின்னர் கடந்த மே மாதம் 28-ஆம் நாள் Sterlite ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கின் விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் கடந்த 9-ஆம் தேதி Sterlite ஆலையின் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ள வேதாந்தா குழுமத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதலவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் Sterlite குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதையடுத்து, இந்த ஆலோசனைக்கு பிறகு நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்நிலையில், கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பஷீர் மற்றும் சி.டி.செல்வம் ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

இதில், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த சம்பவம் நடந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை, இதுவரை எந்த காவல் துறை அதிகாரிகள் மீதும் எந்த வழக்கும் தொடரப்படவில்லை ஆகிய காரணங்களை கூறி வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டது.