துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்ளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர். மக்கள் பலர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு மூடப்பட்ட துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகம் அதாவது வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது.
இதில் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினமும் 45 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஆக்ஸிஜன் உற்பத்திசெய்து தமிழகத்திற்கும்,அண்டை மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விசாரணை வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

‘கேடித் திருடனை கைது செய்த கில்லாடி போலீஸ்’: குவியும் வாழ்த்துகள் ..

சித்திரை திருவிழா : மதுரை கள்ளழகர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…

Recent Posts