முக்கிய செய்திகள்

தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு..


தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீஸார் மீது போராட்டக்காரர்கள் மீண்டும் பெட்ரோல் குண்டு வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீடு ஒன்று பற்றி எரிவதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் கூடுவதை தடுக்க தெருக்கள் முழுவதும் அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்னள் தெரிவிக்கின்றன. மேலும் வீடு வீடாக புகுந்து நடைபெற்று வரும் அதிரடிப்படையினரின் சோதனையில் மக்கள் கடும்  அச்சத்தில் உள்ளனர்.