முக்கிய செய்திகள்

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..


துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதை எதிர்த்தும் விரிவாக்கத்திற்கு தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாத்திமா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.