தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையானதைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்த நிலையில். இன்று மீண்டும் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி மாவட் டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது என தமிழக உள்துறை தெரிவித்துள்ளது.
