முக்கிய செய்திகள்

விரைவில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சானல் “நியூஸ் ஜெ“ ..

அதிமுகவின் அதிகாரப்பீர்வ தொலைக்காட்சியாக ஜெயா தொலைக்காட்சி விளங்கி வந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் ஆளும் அதிமுகவிற்கு எதிராக ஜெயா தொலைக்காட்சி மாறியதால். அதிமுகவிற்கான  ஆதிகாரப்பூர்வ  தொலைக்காட்சி சானல்  தொடங்க அதிமுக தலைமை முடிவெடுத்து.

இதன்படி வரும் செப்டம்பர் 13-ம் தேதி தொலைக்காட்சி  சானலுக்கான லோகோ வெளியிடப்படவுள்ளது. தொலைக்காட்சி சானலின் பெயர்   “நியூஸ் ஜெ“ .

ஏற்கனவே நாளிதழ் “நமது அம்மா” அதிிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சிக்கு முன்னோட்டமாக அ.தி.மு.க சார்பில் `நியூஸ் ஜெ’ என்ற மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் ஒன்றை தொடங்கவுள்ளனர்.

இதற்கான தொடக்க விழா வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில்  `நியூஸ் ஜெ’ லோகோ, மொபைல் ஆப் மற்றும் வெப்சைட்டை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைக்கின்றனர்.