தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு

தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக முடியாது என, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி மறுத்துவிட்டார்.

தனிநபர் தகவல் பாதுகாப்பு, தேர்தலில் தலையிட்டு தாக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துவதற்காக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியும் மற்ற உயரதிகாரிகளும், நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. முதலில் 7 ஆம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், 11 ஆம் தேதிக்கு இந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

ஆனால், குறுகிய அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச சட்ட விவகாரத் தலைமை அதிகாரி விஜயா கடே தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற குழுவின் சம்மனை நிராகரித்த ட்விட்டர் நிறுவனத்தின் நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.