உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் நடத்திய போலீஸீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொடூரமாகக் கொன்றுள்ளன விஷ வித்துகள்!
இந்த அதிர்வலைகள் அடங்கும் முன்னரே பல்ராம்பூரில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு 22 வயது இளம்பெண்ணும் இதேபோன்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பலியாகி உள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் தலைவர்கள் திரு. ராகுல் காந்தி, திருமதி. பிரியங்கா காந்தி இருவரும் காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளனர்.
ஓர் அகில இந்தியத் தலைவர் என்றும் பாராமல் திரு. ராகுல் காந்தியைக் காவல்துறையினர் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இது மனித உரிமைக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரான செயல்!
உத்தரப்பிரதேசத்தில் நடப்பது அராஜக, அட்டூழிய ஆட்சி! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்!