உத்தரப்பிரதேசம் மதுரா அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஆக்ரா நோக்கி செல்லும் கோன்டவானா எக்ஸ்பிரஸ் ரயில் தீனதயாள் ரயில்நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது இன்று அதிகாலை தடம் புரண்டது.
ஆயினும் ரயில் மெதுவாக வந்துக் கொண்டிருந்த போது தடம் புரண்டதால் 1400 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். ரயில் தண்டவாளத்தில் தொழில்நுட்ப ரீதியாக தவறு இருப்பதைக் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்கள், ரயிலின் உயர்மின் அழுத்த இணைப்பைத் துண்டித்தனர்.
இதனால் ரயில் அந்தப் பகுதியில் வரும் போது வேகம் குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்ட போதும் ஆக்ரா-டெல்லி மார்க்கத்தில் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.