வருகிறது ஏர் டேக்சி… வாடகைக்கு குட்டி விமானங்களை இயக்க தயாராகிறது உபேர்!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில், ஏர் டாக்ஸி எனப்படும் வாடகைக்கு குட்டி விமானங்களை இயக்கும் சேவையை, அடுத்த 5 ஆண்டுகளில் தொடங்க உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது..

வாகனங்களின் பெருக்கத்தால், வளர்ந்த, வளரும் நாடுகளில் போக்குவரத்து நெரிசல், தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.. இதையடுத்து, டிரோன் தொழில்நுட்பம் போன்ற நுட்பத்தில் ஆன, நான்கு பேர் பயணிக்கவல்ல, சிறிய ரக குட்டி விமானத்தை வடிவமைத்து, அதன்மூலம் ஏர் டாக்சி சேவையை முன்னெடுக்க உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளை உபேர் தேர்வு செய்திருக்கிறது.

இந்த 5 நாடுகளில், தலா ஒவ்வொரு நகரங்கள் தெரிவு செய்யப்பட்டு, குட்டிவிமான டாக்சி சேவை வழங்கப்படும். இதற்கிடையே, தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நாடுகளில், சோதனை முயற்சியாக, உபேர் ஈட்ஸ்((Uber Eats)) மூலம் நடைபெறும் உணவு விநியோகத்தை, டிரோன்கள் மூலம் வழங்க உபேர் திட்டமிட்டிருக்கிறது.

Uber Plan To Starts Air Taxi Service In 5 Countries include India

 

தமிழ் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் கலைஞர் : நாராயணசாமி புகழ் அஞ்சலி..

தலைமை பண்புக்கு தலைசிறந்தவராக திகழ்ந்தவர் கலைஞர்: நினைவேந்தல் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத்..

Recent Posts