உதயநிதி நாளை முதல் திருக்குவளையிலிருந்து 100 நாள் தேர்தல் பரப்புரை: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை …

உத யநிதிஅண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை

தேர்தல் பரப்புரையை நாளை முதல் துவங்கவிருக்கும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் இன்று மரியாதை செலுத்தினார்.
2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று அ.தி.மு.க அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி மக்களின் மேலான ஆதரவைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 நாட்கள் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நாளை தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கவிருக்கிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

100 நாள் தேர்தல் பரப்புரையை நாளை முதல் துவங்கவிருக்கும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் இன்று மரியாதை செலுத்தினார்.

ரூ.25 கோடி டெண்டரை, பத்து முறை தள்ளி வைத்து, 900 கோடி ரூபாயாக உயர்த்தியது ஏன்?: மு.க. ஸ்டாலின் கேள்வி..

மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்கும் முறையை திரும்பப்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

Recent Posts