உடுமலை சங்கர் கொலை வழக்கில் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் கொலையில் 6 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் உடுமலை சங்கர்,கவுசல்யா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.. அதில் சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா உயர் தப்பினார்.
இந்த வழக்கில் கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை எதித்து அவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பில் அறிவித்தனர்.
மேலும் உடுமலை சங்கர் கொலை வழக்கில் முக்கிய எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த கவுசல்யா தந்தை சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுவிப்பு…. தாயாரின் விடுதலையையும் உறுதி செய்தது உயர்நீதிமன்றம்..