மத்திய பட்ஜெட் 2022 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்…

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே நிகழ் பதிவாக.

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைத் தொகையாக ₹2.37 லட்சம் கோடி உழவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் (MAT) 18.5 % லிருந்து 15 % ஆக குறைக்கப்படும்.
பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மூலம் வரும் வருமானத்தில் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை 2 ஆண்டுகள் வரை தாக்கல் செய்யலாம்
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் ரூபாய் நாணயம் ரிசர்வ் வங்கியால் வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சிறப்பு அம்சங்கள்; 25,000 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள்

பிரதமரின் விரைவு சக்தித் திட்டம் ஏராளமான வேலைவாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு உருவாக்கும்
நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கிமீ தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது.

* விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டமானது குறிப்பிட்ட ஒரு பகுதியிலான உற்பத்திப் பொருளுக்கு ஊக்கமளிக்கும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.

* குறு மற்றும் பெரிய பொருளாதாரத்துக்கு வழி வகுப்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் & பொதுத்துறை முதலீடுகளில் கவனம் செலுத்துவதே #AmritMahotsav நோக்கம்.

1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒருகோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும்
* ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதி செய்யவும் பயன்படுத்தப்படும்.

 * இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றம் சிறு-குறு- நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும்.
பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும்
இயற்கை விவசாயம் கங்கை வழித்தடத்தினை மேம்படுத்தும்.

* இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் 7 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக 400 வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயக்கப்படும்.

* திறன் இந்தியா திட்டம் மேம்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்படும்.

* ட்ரோன் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் தொடங்கும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை

வருமான வரி, உச்ச வரம்பில் மாற்றமில்லை

வருமான வரி மற்றும் அதற்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் சார்ந்த சில அறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

  • ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது
  • பிரதமர் கதி சக்தி கீழ் அடுத்த சில ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்
    பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 48,000 கோடி ரூபாய் வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன.
  • மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 திட்டங்கள் அறிமுகம், சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை துவக்கம்
  • மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தொலைபேசி வழியாக ஆலோசனை வழங்கும் மன ஆரோக்கிய திட்டத்திற்கு அனுமதி
    நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மகளிர் மேம்பாடுதான் முக்கிய கோட்பாடாக அமையும்
  • ஆத்மிபார்பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பமான ’KAWACH’ இன் கீழ் 2000 கி. மீ தூரம் சாலை 2022 – 23 இல் கொண்டுவரப்படும்.
  • வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்துவதற்காக 1,500 கோடி ரூபாயில் திட்டங்கள்
    புதிய திட்டத்தின்கீழ் 2 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்த திட்டம்.
  • 75 மாவட்டங்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் கிளைகள் துவக்க திட்டம்
    மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது.
  • பாரம்பரிய மலைப்பகுதி சாலைகளுக்கான பர்வதமாலா திட்டம், தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சியின் கீழ் கொண்டுவரப்படும்
    1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்.
  • நகர்ப்புற திட்டமிடலை மாற்றியமைக்க குழு அமைப்பு.
  • மின்னணு வாயிலான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு இணைப்பு வழங்க திட்டம்.
  • சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்து திட்டம் அறிமுகம்
    வாகனங்களுக்கான மின்கலன்களை மாற்றிக் கொள்ளும் வசதி மேற்கொள்ளப்படும். ஜிஎஸ்டி வரி வசூல்; உச்சபட்ச சாதனை

ஜிஎஸ்டி வரி திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத அளவு வசூல் உயர்ந்துள்ளது.

2022 ஜனவரி மாதம் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாகும், இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து அதிகபட்ச தொகையாகும்.

மாற்றுத் திறனாளி, கூட்டுறவு சங்கங்களுக்கு வரிச் சலுகை

பெற்றோர் அல்லது பாதுகாவலர், ஊனமுற்ற குழந்தைகளிடமிருந்து காப்பீடு செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச வரியே விதிக்கப்படுகின்றன. இனி கூட்டுறவு நிறுவனமும் 15% மட்டுமே செலுத்த வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் 18.5 சதவீத வரியில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

1 முதல் 10 கோடி வருமானம் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது


வீடு கட்டும் திட்டம்

2022-23 ஆம் ஆண்டில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகளை கட்டி முடிக்க ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

டிஜிட்டல் ரூபாய் வெளியீடு

ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும். மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும். மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும்.

பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் 2022 முதல் வெளியிட ரிசர்வ் வங்கியால் பயன்படுத்தப்படும். கிரிப்ட்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய டிஜிட்டல் நாணயம் வெளியிடுவது தொடர்பாக நாடுமுழுவதும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வருகிறது 5ஜி

நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 5ஜி தொழில்நுட்பம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான ஏலம் நடப்பு ஆண்டில் நடத்தப்படும்.2023-ம் ஆண்டுக்குள் 5ஜி தொழில்நுட்பம் கிடைக்க ஏதுவாக அமையும்.

ஏவிஜிசி மூலம் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக் ஆகியவை இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான மகத்தான திறனை வழங்குகிறது.

வளர்ச்சியடைந்த 112 மாவட்டங்கள்

நாடுமுழுவதும் 112 மாவட்டங்களில் 95% மாநில சராசரி மதிப்புகளையும் தாண்டி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. 2022-23ல் இந்த திட்டம் மூலம் பின்தங்கிய பகுதிகள் மீது கவனம் செலுத்தும்.

எல்லையோர கிராமங்களுக்கான துடிப்பான கிராமங்கள் திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சாலை இணைப்பு மற்றும் வாழ்வாதார உருவாக்கத்திற்கான ஆதரவு வழங்கப்படும்.

‘கோர் பேங்கிங்’ முறைக்கு மாறும் தபால் நிலையங்கள்

நாடுமுழுவதும் 1.5 லட்சம் அஞ்சலகங்கள் 100% கோர் பேங்கிங் முறையின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம் எங்கிருந்தும் அஞ்சல கணக்குகளை இயக்கிக் கொள்ளலாம். இது கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும்.

டிஜிட்டல் பேங்கிங் மற்றும் ஃபின்டெக் ஆகியவற்றை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதனை முன்னெடுத்து, 75 மாவட்டங்களில் 75 வங்கி அலகுகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

விவசாயத்தில் ட்ரோன்- விவசாய ஸ்டார்ட் அப்

கிசான் ட்ரோன்களின் பயன்பாடு பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தெளித்தல் ஆகியவற்றிற்காக ஊக்குவிக்கப்படும்,

விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான தொடக்க நிலை நிதியளிக்க நபார்டு மூலம் எளிதாக்கப்படும். இது பண்ணை விளைபொருட்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற ஏதுவாகும். ஸ்டார்ட்அப்கள் கொண்ட விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரிவளிக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவோம்.

டிஜிட்டல் பல்கலைக்கழகம்

உலகத்தரம் வாய்ந்த கல்விக்காக டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இது வெவ்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும்.

இது நெட்வொர்க் மையங்கள் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. திறன் மேம்பாட்டுக்காக புதிய இணையதளம் தொடங்கப்படும்.

200 டிவி சேனல்

கடந்த வருடங்களாக கல்வியை இழந்த தாழ்த்தப்பட்ட குழந்தைகளிடையே கல்வி அளிப்தற்காக புதிய டிவி சேனல்கள் உருவாக்கப்படும்.

ஒரு வகுப்பு, ஒரு டிவி சேனல் என்ற திட்டம் 2ல் இருந்து 200 டிவி சேனல்களாக விரிவுபடுத்தப்படும். இது அனைத்து பிராந்திய மொழிகளிலும் கல்வியை வழங்க மாநிலங்களுக்கு உதவும்.

நதிகள் இணைப்பு திட்டம்

9 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் நோக்கில் கென்-ட்வா இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும்.

5 நதி இணைப்புகளுக்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது, அவை செயல்படுத்தப்படுவதற்கு மத்திய அரசு ஆதரவை வழங்கும்.

2022 – தினை ஆண்டு

2021-22 ராபி பருவத்தில் கொள்முதலில் 1.63 கோடி விவசாயிகளிடமிருந்து 1208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரசாயனமற்ற இயற்கை விவசாயம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும்.

2022 ஆம் ஆண்டு தினை ஆண்டாக இருக்கும் என்பதால், அறுவடைக்குப் பிந்தைய தினை உற்பத்திக்கான மதிப்பு கூட்டலுக்கு ஆதரவளிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

உற்பத்தி ஊக்கத்தொகை

ஆத்மநிர்பர் பாரதத்தை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் இலக்கு கொண்டது. ஐந்தாண்டுகளில் 30 லட்சம் கோடி கூடுதல் உற்பத்தி செய்யவும் வாய்ப்பாக அமையும்.

400 புதிய வந்தே பாரத் ரயில்கள்

400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டுகளில் கொண்டு வரப்படும். மெட்ரோ அமைப்புகளை உருவாக்குவதற்கான புதுமையான வழிகளை செயல்படுத்த 100 பிரதமர் கதி சக்தி சரக்கு டெர்மினல்கள் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான்

2021-22 பட்ஜெட்டில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. வரும் பட்ஜெட் (2022-23) இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எஸ்சி, எஸ்டி,பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் மூலம் வழிநடத்தப்படும்

அடுத்த 25 ஆண்டுக்களுக்கான பட்ஜெட்

பட்ஜெட் உரை: அடுத்த 25 ஆண்டுகளை கணக்கில் கொண்டு இந்த பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏழை- எளிய மக்கள், பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்டோர் என அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்:காரைக்குடி 3 வார்டில் வாக்காளர்களுக்கு குவியும் பரிசுமழை..

“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு சோனியா காந்தி,ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..

Recent Posts