முத்தலாக் விவகாரத்து முறையை ரத்து செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள சமத்துவ உரிமைக்கு எதிராக உடனடியாக முத்தலாக் வழங்கும் முறை இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடி முத்தலாக் முறை சட்டப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் கூறியது. மேலும் உடனடி முத்தலாக்கைத் தடை செய்யும் வகையில் சட்டத்தைத் திருத்தவும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
இதனால் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா கடந்த டிசம்பரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறாததால் இது தொடர்பாக அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அவசர சட்டம் நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டப்படி உடனடி முத்தலாக் முறையில் பெண்களை விவாகரத்துச் செய்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
Union Cabinet today has approved an ordinance on Triple Talaq bill, making Triple Talaq a criminal act: Sources