உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 13 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 நகர பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் 3 கோடியே 32 லட்சம் நகர்ப்புற வாக்காளர்கள் வாக்களித்தனர். தேர்தல் நடைபெற்ற 16 மாவட்டங்களில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு உள்ளது என்பதைக் காட்டும் தேர்தல் என்பதால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் நடைபெற்ற லக்னோ, மீரட், சஹரான்பூர் ((Saharanpur)), காசியாபாத், கோரக்பூர் உள்ளிட்ட 16 மாநகராட்சிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.