முக்கிய செய்திகள்

பாஜகவிற்கு பாடம் புகட்டிய மக்கள்: அகிலேஷ்..


உ.பி மாநிலத்தில் புல்பூர், கோரக்பூர் ஆகிய 2 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சி தலைவர் அகிலேஷ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது : மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியினர் எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். மாயாவதிக்கும் அவர்களது கட்சியினருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

தேர்தலில் பாஜக., வின் முறையற்ற அரசிற்கு எதிராக மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் பாஜக., ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. பாஜக.,அரசு மக்களை சித்ரவதை செய்தது; அதற்கான பாடத்தை மக்கள் தற்போது வழங்கியுள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர், அதில் ஒன்றை கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை. ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. ஓட்டுசீட்டு மூலம் தேர்தல் நடந்திருந்தால் பாஜக., லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ச்சியடைந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.