முக்கிய செய்திகள்

ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..


இந்திய நாட்டின் மிக உயரிய பதவிகளான ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு வருடம் தோறும் யுபிஎஸ்சியால் தேர்வு நடத்தப்பட்டு பணிகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு 892 பணியிடங்களளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன..

கல்வி தகுதி

அரசு அங்கீகாரம் பெற்றந பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-8-2018 தேதிகளில் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும்,32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.அதாவது 2-8-1986 -க்குப்பின் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.1-8-1997-க்கு முன் பிறந்தவாராக இருத்தல் அவசியம். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு உச்சவரம்பு உண்டு.

தேர்வு முறை

முதல்நிலைத் தேர்வு,முதன்மை தேர்வு,ஆளுமைத் தேர்வு,நேர்கானல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு கட்டணம்.

பெண்கள்,மாற்றுதிறனாளிகள்,எஸ்.டி,எஸ்.சி பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது. மற்றவர்கள் ரூ.100 ஆன்லையனில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிற்கும் முறை

விருப்பம்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

www.upsconline.nic.in என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க 6-3-2018 கடைசி தேதியாகும்.
முதல்நிலைத் தேர்வு3-6-2018 அன்று நடைபெறும்