முக்கிய செய்திகள்

ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உறவு பாதிக்கும் : பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அது பாகிஸ்தானுடனான உறவைக் கடுமையாக பாதிக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க பாகிஸ்தான் அரசு தவறிவிட்டதாக கூறி, அந்நாட்டி நீதிமன்றம் ஹபீஸ் சையதை விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. “சர்வதேச நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்ததுடன், ஐநாவினால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சையதை பாகிஸ்தான்அரசு சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளது. இது மும்பை தாக்குதல் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் அதற்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது” வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார். இந்நிலையில், ஹபீஸ் சையது விடுவிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹபீஸ் சையது மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க தவறினால், அந்நாட்டுனான உறவை அது பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அவப்பெயரும் இதனால் ஏற்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஹபீஸ் சையது விவகாரத்தில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

US Warns Pakistan Over Freed Terrorist Hafiz Saeed