நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் என திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி யமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகையில் ‘‘வாங்கி கடனுக்கு வட்டி செலுத்தி வருவதையே தமிழக பட்ஜெட் உணர்த்துகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திட்டங்கள் இல்லை. வேலை வாய்ப்புக்கான திட்டம் ஏதும் இல்லை. இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். வருவாயை மேம்படுத்த எந்த திட்டமும் இல்லை.
வெற்று அறிவிப்பு மட்டுமே பட்ஜெட்டில் உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.