வைகை அணையிலிருந்து 3000 கனஅடி நீா் திறப்பு :மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..


வைகை அணை 69 அடியை எட்டிய நிலையில் வினாடிக்கு 3 ஆயிரத்து 100 கனஅடி நீா் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, வைகை கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கான நீர் வரத்து 3333கனஅடி நீராக இருந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகமாகியுள்ளதால், 71 அடி உயரமுள்ள வைகையில், 68.71 அடி நீர் உயர்ந்தது.

இதனையடுத்து, இன்று மாலை வைகை அணையிலிருந்து விநாடிக்கு 3,100 கனஅடி நீர் திறக்கப்பட்டது.அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வைகை கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கையாக மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.