முக்கிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வைகோ தலைமைசெயலகம் வருகை..

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்ய தலைமைசெயலகம் வந்துள்ளார்.

திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கனிமொழி,துரைமுருகன்,டி.ஆர்.பாலு பொன்முடி ஆகியோர் தலைமைசெயலகம் வந்துள்ளனர்.

மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்படும் முன் சென்னையில் வைகோ பேட்டியளித்தார்.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள், திராவிட லட்சியங்களை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தருவதை ஏற்க முடியாது எனவும் வைகோ கூறியுள்ளார்.