வைகுண்ட ஏகாதசி: வைணவ தலங்களில் பரமபத வாசல் திறப்பு…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு , திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட வைணவ கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா

கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர்.
மார்கழி மாதம் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே பக்தர்கள் கடந்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அதனால் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில், உள்ளிட்ட அனைத்து வைணவ கோவில்களிலும் இன்று(29ம் தேதி) அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான மக்கள் பக்திப் பரவசத்துடனும், ‛கோவிந்தா.. கோவிந்தா’ என பரவசத்துடனும் சுவாமி தரிசனம் செய்தனர்.