ராணுவ மரியாதையுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வேத மந்திரங்கள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று காலமானார். இதையடுத்து அவரது வீட்டில்  வைக்கப்பட்ட வாஜ்பாயின் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஏராளமான பொதுமக்களும், பா.ஜ.க தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர். பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்க்சக் (Jigme Khesar Namgyel Wangchuk) டெல்லி வந்து அஞ்சலி செலுத்தினார்.

இதே போல் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் நேரில் வந்து வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், வாஜ்பாய் உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து மலர் அலங்காரம் செய்யப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா பங்கேற்று மூன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.

வழிநெடுகிலும் வாஜ்பாய் உடலுக்கு ஏராளமனோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். ஸ்மிரிதி தலத்தில் வாஜ்பாயின் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். துப்பாக்கி குண்டுகள் முழங்க, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு அரசு மரியதை செய்யப்பட்டது. அதன் பின்னர் வேத மந்திரங்கள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது.

Vajpayee funeral

வாஜ்பாய் இறுதி ஊர்வலம் தொடங்கியது….

கலைஞர் நினைவிடத்திற்கு 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

Recent Posts