முக்கிய செய்திகள்

வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு: ராஜ்நாத்சிங் சென்று பார்வையிட்டார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று வாய்பாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.  

வாஜ்பாய்க்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும்,  எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.  சிறுநீரக தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.  கடந்த இரண்டு மாதங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.  வாஜ்பாயின் உடல்நிலை குறித்து பிரதமர் அலுவலகம் தொடர்ந்து கேட்டு அறிந்து வருகிறது.   

மூட்டுவலி பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த வாஜ்பாய்க்கு கடந்த இருபது ஆண்டுகளில் 10 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரால் சரிவர பேசமுடியாமல் போனதும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.  94 வயதாகும் வாஜ்பாய்க்கு வயது மூப்பின் காரணமாக தற்போது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

Vajpayee Health Condition is at critical