வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்….

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

டெல்லியில் நடந்த விழாவில் இந்த நாணயம் வெளியிடப்பட்டது. இதில் பாஜக, தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.