வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்: மாங்குடி எம்எல்ஏ கோரிக்கை..


தமிழ்நாடு சட்டப்பேரவையில் வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மாங்குடி கோரிக்கை வைத்தார்.
வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.அழகப்பரின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும்.

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்தில் செய்தித்துறை அமைச்சர் மு. பெ சாமிநாதனிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி வினாக்கள் விடைகள் நேரத்தில் கேள்வி எழுப்பினார்.

“கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்து விழுச்செல்வன்” வள்ளல் அழகப்பர் காரைக்குடியில் பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் தமிழ் வளர்ச்சிக்காக நிதிகளையும் கொடுத்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் காஷ்மீர் போரின் போது இரண்டு விமானங்களை நாட்டிற்காக கொடுத்துள்ளார்.

அவரைப் போற்றும் வகையில் ஏப்ரல் 6 அவர் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் எனவும் அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதலளித்த அமைச்சர் சாமிநாதன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கடந்த வாரம் இந்த கோரிக்கைகள் தொடர்பான கடிதத்தை என்னிடம் வழங்கினார்.
முதலமைச்சர் அவர்களிடம் கலந்து பேசி இதற்கான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

செய்தி
சிங்தேவ்

பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை…

Recent Posts